இங்கிலாந் பூங்காவில் திடீரென மூன்று நபரை குத்தி கொன்ற 25 வயது வாலிபர்.!

இங்கிலாந்தில் உள்ள ரீடிங் நகரில் போர்பரி என்ற பூங்காவில் சனிக்கிழமை மாலை எப்பவும் போல மக்கள் அவர்களது வேலையை செய்து கொண்டிருக்கும்போது கூட்டத்துக்குள் புகுந்த 25 வயது வாலிபர் ஒருவர் திடீரென கூச்சலிட்டு அவர் வைத்திருந்த கத்தியால் அங்குள்ள மக்களை மீது தாக்க தொடங்கினார். இதனால் பூங்காவில் சலசலப்பு உண்டாகியது இதனால் மக்கள் அனைவரும் அங்கும்மிங்கும் ஓட தொடங்கின.
இருந்தாலும் அந்த வாலிபர் விரட்டிச் சென்று கத்தியால் குத்தினார். இந்நிலையில் இந்த வாலிபரின் வெறிச் செயல் குறித்து அங்கிருந்த மக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்திய வாலிபரை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
The man responsible was allegedly Khairi Saadallah, 25. pic.twitter.com/sxeUyspEPe
— Ben Avery (@benavery9) June 21, 2020
இந்த கொடூர தாக்குதலில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள்.இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்று பேரில் ஒருவர் வரலாற்று ஆசிரியர் ஜேம்ஸ் ஃபர்லாங். கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த பலரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். தேம்ஸ் வேலிபோலீஸ் இயான் ஹன்டர் கூறும்பொழுது, இந்தத் தாக்குதலில் ஒரு வாலிபரை தவிர வேறு யாருக்கும் தொடர்பு இல்லை.
அந்த வாலிபர் லிபியா நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது என கூறினார். லிபிய நாட்டைச் சேர்ந்த 25 வயது நபர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தேம்ஸ் பள்ளத்தாக்கு போலீசார் இதை பயங்கரவாத தாக்குதல் என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில் இவர் 16 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து விடுதலையானாராம், இதற்கு முன்பு மனஉளைச்சல் மற்றும் உளவியல் ரீதியான பிரச்சினைக்களுக்காக சிகிச்சை பெற்று உள்ளார்.
சிரியாவுக்கு செல்ல வேண்டும் என்ற இவரது ஆர்வம் காரணமாக கடந்த ஆண்டு சில மாதங்கள் இங்கிலாந்தின் உளவு அமைப்பின் கண்காணிப்பு வட்டத்தில் இருந்துள்ளார். இந்த வகையான சம்பவங்கள் மிகவும் அறியதாகவும் இருந்தாலும் இந்த வருந்தத்தக்கது என்று பொலிஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது மேலும், இந்த சம்பவத்தை விசாரிக்கவும், என்ன நடந்தது என்பதை உறுதிப்படுத்தவும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
GetOut கையெழுத்திட அழைத்த ஆதவ்., மறுத்த பிரசாந்த் கிஷோர்!
February 26, 2025