அமெரிக்காவில் ஒரே நாளில் 2,400 பேர்பலி! 26,000-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலானது மிக பெரிய அளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலில் சீனாவில் பரவி பல்லாயிரக்கணகானோரின் உயிர்களை காவு வாங்கிய கொரோனா வைரஸானது, மற்ற நாடுகளையும் தீவிரமாக தாக்கி வருகிறது.
இதனால் அனைத்து நாடுகளிலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்கா உலகம் முழுவதும் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கையிலும், பலியானோர் எண்ணிக்கையிலும் முதலிடத்தில் உள்ளது.
தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 6 லட்சத்து 13 ஆயிரத்து 886 பேருக்கு வைரஸ் பரவியுள்ள நிலையில், குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 26 ஆயிரத்து 945 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 2,407 பேர் பலியாகியுள்ளனர். இதனால், அமெரிக்காவில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,047 பேர் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.