236 காரட் வைரம் ரஷ்யாவில் கண்டுபிடிப்பு.! 230 மில்லியன் ஆண்டுகள் பழமையானது.!
ரஷ்யா நாட்டில் யாகுடியா பகுதியில் 236 காரட் வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை கண்டறியபடாத மிகப்பெரிய இயற்கை வண்ண வைரம் என கூறப்படுகிறது.
ரஷ்யா நாட்டில் யாகுடியா பகுதியின் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஓர் சுரங்கத்தில் மஞ்சள்-பழுப்பு நிறம் கொண்ட 236 காரட் வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சுரங்கமானது, அல்ரோசா குழுமத்திற்கு சொந்தமானது. இந்த வைரமானது ரஷ்யாவில் இதுவரை கண்டறியபடாத மிகப்பெரிய இயற்கை வண்ண வைரம் என அல்ரோசா குழுமம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரத்தின் தோற்றத்தின் படி, இது 120-230 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என கூறப்பட்டுள்ளது.
இந்த வைரத்தின் பரிணாமங்கள் 47*24*22 ஆக உள்ளதாம். நிபுணர்களால் இந்த வைரம் மதிப்பீடு செய்யப்பட்டு, அதன் பின்னர், இதன் மதிப்பீடு அளவீடு செய்யப்படும் என அல்ரோசா குழுமம் சார்பாக கூறப்பட்டுள்ளது.