பாகிஸ்தானில் கல்குவாரியில் பாறை சரிந்ததில் 22 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
பாகிஸ்தானில் கல்குவாரியில் பாறை சரிந்ததில் 22 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணம் மொஹமண்ட் மாவட்டத்தில் பளிங்கு கல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல இதில் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென பெரிய பாறை ஒன்று சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்ததால் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அதில் சிக்கிக்கொண்டனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் பாறைகளை அகற்றி மீட்பு பணிகளை ஆரம்பித்தனர். இதுவரை 22 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது எனவும் மேலும் 15 முதல் 20 பேர் வரை இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் எனவும் தெரிகிறது என மீட்பு படையினர் கூறியுள்ளனர். மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து வருகிறது உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.