உக்ரைன் நாட்டில் ராணுவ விமானம் கீழே விழுந்து நொருங்கியதில் 22 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.
25க்கும் மேற்பட்டோருடன் உக்ரைன் நாட்டில் ராணுவ விமானம் ஒன்று நேற்று பயணம் செய்துள்ளது. அப்போது விமான தளத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் விமானம் சட்டென்று கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. இதனால் விமானத்தில் பயணம் செய்த 22 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர், மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். விபத்து குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த ஜனவரி மாதத்தில் உக்ரைனில் ஏற்பட்ட ஒரு விமான விபத்தில் 176 பேர் பலியாகியிருந்தனர். இந்நிலையில் இரண்டாவதாக மீண்டும் இந்த சம்பவம் ஏற்பட்டு உள்ளதால் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில்…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பல வீரர்கள் பேட்டிங்கிலும், பல வீரர்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஆனால், அதிக…
சென்னை : கம்பேக் என்றால் இப்படி இருக்கவேண்டும் என தமிழ் சினிமாவில் அஜித் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் …
சென்னை : இன்று ஏப்ரல் 1 தமிழ் மாதமான சித்திரை 1ஆம் தேதியை, ஒரு பகுதியினர் தமிழ் புத்தாண்டு தினமாகவும், ஒரு…
சென்னை : மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில் முக்கிய…
திருச்சூர் : நட்புக்கு ஒண்ணுன்னா நண்பர்கள் ஓடி வந்துருவாங்க., எனும் சொற்றொடர்களை அடிக்கடி கேட்டிருப்போம். அதற்கு ஏற்ற பல சம்பவங்களும்…