கேரளா முதல்வர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் முயற்சியால் 22 இந்தியர்கள் விடுதலை..!
துபாய்: குவைத்தில் இந்தியாவை சேர்ந்த பலர் போதை மருந்து பயன்படுத்தியது, போதை மருந்து கடத்தல், திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதை அடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் கோரிக்கையை ஏற்று நேற்று முன்தினம் மரண தண்டனை கைதிகளான 15 இந்தியர்களின் தண்டனையை ஆயுளாக குறைத்து குவைத் அரசு அறிவித்தது.
ஆனால் குவைத் சிறையில் உள்ள இந்தியயர்களை விடுவிக்குமாறு கேரளா வந்த ஷார்ஜா அதிபர் ஷேக் சுல்தான் பின் முகமது அல் காஸிமியிடம் முறையிட்டது கேரளா இடது முன்னணி அரசு. முதல்வர் பங்கும் இதில் பிரதானமாய் உள்ளது என்பது குறுப்பிடத்தக்கது.
இந்த நிலையில் குவைத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 22 இந்தியர்களை உடனடியாக விடுதலை செய்வதாக குவைத் அமீர் அறிவித்துள்ளதாகவும், மேலும் 97 இந்தியர்களின் தண்டனைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.