பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் மழை காரணத்தால் கடந்த 2 நாட்களுக்கு முன் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், கெச் பகுதியிலிருந்து சென்ற வாகனம் ஒன்று முர்க் அப் நடி என்ற இடத்தில் வெள்ளத்தில் சிக்கியது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 11 பேர் இருந்துள்ளனர். தகவலறிந்து வந்த மீட்பு படையினர் வயதுமுதிர்ந்த பெண் உட்பட இரண்டு பேரின் உடல்கள் மீட்டுள்ளனர். மேலும் அதிலிருந்த 2 குழந்தைகள் காணவில்லை.
இந்நிலையில் இது குறித்து தெரிவித்த அரசு செய்தி தொடர்பு அதிகாரி லியாகத் ஷாவானி, இதுவரை பாகிஸ்தானில் 21 பேர் மழை வெள்ளத்தால் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், மழை வெள்ளத்தால் 18 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். அங்குள்ள பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…