இலங்கைக்கு எதிரான டி-20 போட்டி;இந்தியா அணி அபார வெற்றி!!!
‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். ஓட்டங்களை குவிக்கும் முனைப்பில் முதலில் பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணி .
கேப்டன் உபுல் தரங்கா 5 ஓட்டங்களிலும், விக்கெட் கீப்பர் டிக்வெல்லா 17 ஓட்டங்களிலும். மேத்யூசும் 7 ஓட்டங்களும் எடுத்து அவுட்டானார்கள்.
இதற்கிடையே 2-வது விக்கெட்டுக்கு இறங்கிய தில்ஷன் முனவீரா, இந்திய பந்து வீச்சை நொறுக்கினார்.இதனால் இலங்கையின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.53 ஓட்டங்கள் எடுத்திருந்த சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் கிளன் போல்டு ஆனார்.பிரியஞ்சன் கடைசிவரை தாக்குப்பிடித்து விளையாடிநிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்கு 170 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர் ஆடிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மாவும் 9 ஒட்டங்கள், லோகேஷ் ராகுலும் 24 ஓட்டங்கள் எடுத்து சீக்கிரம் வெளியேறினாலும் கேப்டன் விராட் கோலியும், மனிஷ் பாண்டேவும் நிதானத்தோடு ஆடி அணியை தூக்கி நிறுத்தினர்.
தனது 50-வது சர்வதேச 20 ஓவர் போட்டியில் கால்பதித்த விராட் கோலி அரைசதம் அடித்து அசத்தினார். அவருக்கு இது 17-வது அரைசதமாகும்.அணியின் ஸ்கோர் 161 ஓட்டங்களாய் எட்டியபோது விராட் கோலி 82 ஓட்டங்களில் கேட்ச் ஆனார்.
பின்னர் மனிஷ் பாண்டே வெற்றிக்குரிய ஓட்டங்களை பவுண்டரி மூலம் கொண்டு வந்தார். இந்திய அணி 19.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 174 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய அணி 9 ஆட்டங்களிலும் (3 டெஸ்ட், 5 ஒரு நாள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டி) தோல்வியே சந்திக்காமல் முழுமையாக வெற்றி வாகை சூடியது.
ஒரு தொடரில் மூன்று வடிவிலான போட்டிகளையும் சேர்த்து தோல்வியே சந்திக்காமல் அதிக வெற்றிகளை குவித்த அணிகளின் வரிசையில் இந்தியா, ஆஸ்திரேலியாவை சமன் செய்து உள்ளது.