இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான இரண்டாவது 20 ஓவர் போட்டி இன்று…..!
இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான இரண்டாவது 20 ஓவர் போட்டி இன்று நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலிய அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இதில் 5 ஒரு நாள் போட்டிகள் முடிவடைந்தன. இதில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து 20 ஓவர் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.இந்திய அணியானது பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறந்த அணியாக மாறிருக்கிறது என்பது கடந்த முதல் ஆட்டமே சிறந்த உதாரணம்.அதன் அடிப்படையில் இன்றைய ஆட்டத்திலும் இந்தியா வெற்றி பெற்றால் தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பு அமையும். எனவே இன்றைய போட்டி பரபரப்பாக அமையும் என்பதில் மாற்று கருத்தில்லை.