208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட களமிறங்கும் இந்திய அணி]
இந்தியா தென்ஆபிரிக்கா இடையில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்து 286 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
பிறகு தனது முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 92 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்திருந்தது. அடுத்து அதிரடியாக விளையாடிய ஹார்டிக் பாண்டியா 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் தென்ஆப்பிரிக்கா அணி 77 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
பிறகு 2வது இன்னிங்க்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா அணி இந்தியா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 130 ரன்களுக்கு மொத்த விக்கெட்டையும் இழந்து ஆட்டமிழந்தது. இதில் சிறப்பாக பந்து வீசிய சமி, பும்ப்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், ஹார்டிக் பாண்டியா, புவனேஸ்குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைபற்றினர். ஆதலால் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இன்றும் நாளையும் ஆட்டம் மீதம் இருப்பதால் இந்திய அணி வெற்றி பெறுவது தற்போது எளிதாகி உள்ளது.
source : dinasuvadu.com