2023 தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படங்கள்! ஜெயிலர் படத்தை மிஞ்சிய லியோ?

2023 highest grossing movies tamil nadu

இந்த 2023-ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடிவடையப்போகிறது. இந்த ஆண்டு சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் வரை பல படங்கள் வெளியாகி தமிழகத்தில் அதிகம் வசூல் செய்து பெரிய பிளாக் பஸ்டர் படங்களாகவும் ஆகி இருக்கிறது. அதில் சில படங்கள் விமர்சன ரீதியாகவும் தோல்வியையும் சந்தித்து இருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் இந்த ஆண்டு வெளியானதில் தமிழ் படங்களில் எந்த படம் அதிகம் வசூல் செய்துள்ளது என்பதற்கான 10 படங்கள் கொண்ட விவரத்தை பார்க்கலாம்.

2023 தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படங்கள்

1.லியோ 

  • நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் லியோ. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக உலகம் முழுவதும் 590 கோடிகள் வரை வசூல் செய்திருந்தது. தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் 210 கோடிகள் வசூல் செய்து இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

2.ஜெயிலர் 

  • ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான ஜெயிலர் திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக ஹிட் ஆனது. இந்த படம் உலகம் முழுவதும் 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தாலும் தமிழகத்தில் 200 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளதால் இந்த ஆண்டு தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த இரண்டாவது படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

3.வாரிசு 

  • விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற திரைப்படம் வாரிசு இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 142 கோடி வசூல் செய்துள்ளது.

4.பொன்னியின் செல்வன் 2

  • பொன்னியின் செல்வன் முதல் பாகம் உலகம் முழுவதும் பெரிய வரவேற்பை பெற்று  தமிழகத்தில் 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. ஆனால், பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் இந்த ஆண்டு வெளியாகி தமிழகத்தில் மட்டும் 140 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.

5.துணிவு 

  • அஜித் நடிப்பில் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான துணிவு திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடி வசூல் செய்திருந்தது. தமிழகத்தில் மட்டும் 127 கோடி வசூல் செய்துள்ளது.

6.மார்க் ஆண்டனி 

  • ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, விஷால் ஆகியோர் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய ஹிட் ஆன திரைப்படம் மார்க் ஆண்டனி. இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 60 கோடி வரை வசூல் செய்துள்ளது.

7.மாமன்னன் 

  • இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடிப்பில் வெளியானகி மிகப்பெரிய வெற்றியை வெற்றி திரைப்படம் மாமன்னன். இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 55 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

8.மாவீரன் 

  • இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 300 கோடி வரை வசூல் செய்திருந்தது.  தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம்  52  கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

9.ஜவான் 

  • நடிகர் ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி உலகம் முழுவதும் ஆயிரம் கோடி வசூல் செய்த திரைப்படம் ஜவான் இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 49 கோடி வசூல் செய்துள்ளது.

10.வாத்தி 

  • நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் வாத்தி. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் 40 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்