2021-ல் வெளிவரவுள்ள புதிய ஜீப் காம்பஸ் இதுதான்!

Default Image

ஜீப் நிறுவனத்தின் புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி, அடுத்தாண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல கார் நிறுவனமான ஜீப், தனது காம்பஸ் ரக கார்களை அறிமுகம் செய்துள்ளது. அது, இந்தியாவில் அதிகளவில் வரவேற்பை பெற்றுவந்த நிலையில், தற்பொழுது புதிய 2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய காம்ப்ஸ், 2021 தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் வெளியானது. இதில் தற்போதைய காம்பஸை விட கூடுதலான டெக்னாலாஜி சார்ந்த அம்சங்களை இடம்பெற்றுள்ளது.

வழக்கமான ஜீப் பாரம்பரிய 7 ஸ்லாட் கிரில் அமைப்பில் இன்ஷர்ட்ஸ், புதிய ஹெட்லைட்டுடன் இணைந்த எல்.இ.டி. டிஆர்எல், புதிய பம்பர், அகலமான ஏர் டேம் வென்ட் பம்பரில் சிறிய ஸ்டைலிங் மாற்றப்பட்டுள்ளது. இன்டிரியரை பொருத்தளவில், டிஜிட்டல் கிளஸ்ட்டர், 10.1 அங்குல TFT டிஸ்பிளே, FCA U-Connect 5 கனெக்ட்டிவிட்டி அம்சம், அமேசான் அலெக்சா ஆதரவு, ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆதரவு இணைக்கப்பட்டு, மேலும் ஏசி, ஹெச்.வி.ஏ.சி. கன்ட்ரோல்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

என்ஜினை பொறுத்தளவில் இதில் பிஎஸ்-6 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. என்ஜினை பொருத்தபட்ட 2.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜின். இதில் 170 PS பவரை வழங்கும் செயல்திறன் கொண்டுள்ளது. இது, 3750 RPM மற்றும் 350 Nm டார்க், 1500-2500RPM-ல் உருவாக்குகிறது. அதே நேரத்தில் 9- ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியுடனும், 6 மேனுவல் கியர்பாக்ஸ் வசதியுடனும் வருகிறது. இந்த புதிய ஜீப் காம்பஸில் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் வெளிவரும் எனவும், இதன் விலை 17 லட்சம் முதல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்