அமெரிக்காவில் பிறந்தது 2021.. வாணவேடிக்கையுடன் உற்சாக வரவேற்பு!
உலகளவில் பல நாடுகளில் புத்தாண்டு பிறந்ததை தொடர்ந்து, அமெரிக்காவிலும் பிறந்தது. வாணவேடிக்கையுடன் பொதுமக்கள் புது வருடத்தை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
2020 என்பது பலருக்கும் மறக்க முடியாத ஒரு ஆண்டாக இருக்கும். தற்பொழுது பல நாடுகளில் இந்த 2020 முடிவடைந்ததை தொடர்ந்து, உலகம் முழுவதும் மக்கள் உற்சாமாக இந்த 2021-ஐ வரவேற்றனர். அந்தவகையில், முதலாவதாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. அந்நாட்டு மக்கள், வாணவேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்றதை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் புத்தாண்டை பிறந்தது.
இந்தியாவிலும் இந்த புத்தாண்டை பல மாநிலங்களில் கோலாகலமாக வரவேற்ற நிலையில், தற்பொழுது அமெரிக்காவில் இந்த புத்தாண்டு பிறந்தது. இந்த புத்தாண்டை மக்கள் வாணவேடிக்கையுடன் உற்சாமாக வரவேற்றனர். அதுதொடர்பான புகைப்படங்களை வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பேயோ, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Happy New Year. Celebrating the start of 2021 all around the world. The world has benefitted from four great years of America First. Watch this space. pic.twitter.com/1SM7CLE2NR
— Secretary Pompeo (@SecPompeo) January 1, 2021