சோதனை ஓட்டத்தில் சிக்கிய 2020 விட்டரா ப்ரெஸ்சா..!

தற்பொழுது வெளிவந்துள்ள விட்டரா ப்ரெஸ்சாவின் படங்களை வைத்து பார்க்கும்போது, எஸ்.யு.வி. மாடலில் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. முன்புறம் ஃபாக் லேம்ப், புதிய பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் புதிய ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்களில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், முன்புற கிரில் மேம்படுத்தப்படலாம் என தெரிகிறது.
இதன் டெயில் லைட்கள் மற்றும் பின்புற ஸ்பாயிலரில் சற்று மாற்றங்கள் இருக்கும். உள்புறம் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் வழங்கப்படுகிறது.
இந்த மாடலில் 1.5 லிட்டர் ஸ்மார்ட் ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இது 1462சிசி என்ஜின் 103.5 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 138 என்.எம். டார்க் செயல்கிறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 4-ஸ்பீடு ஆட்டோமேடிக் டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.