வருடா வருடம் தமிழ் சினிமாவில் ரிலீசாகும் திரைப்படங்களில் எண்னிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது வரை கிட்டத்தட்ட 200 படங்களை நெருங்கிவிட்டது. தமிழ் சினிமா ரிலீஸ். ஆனால் அவற்றில் வெற்றிபெற்ற படங்கள் நாம் விரல்விட்டு எண்ணிவிடலாம் அவ்வளவுதான்.
ரிலீஸ் செய்ய சரியான தேதி கிடைக்காததால் முன்னணி நடிகர்களின் படங்களே எதிர்பார்த்த வசூலை பெற தவறிவிட்டன. பண்டிகை காலங்களில் முன்னணி நடிகர்களின் படங்களே போட்டிபோட்டு கொண்டு ரிலீஸ் ஆவதால் அந்த பிரமாண்ட ரேஸில் சின்ன சின்ன நல்ல படங்கள் காணாமல் போய் விடுகின்றன.
ரசிகர்கள் எதிர்பார்த்த சரியான நேரத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் என சூப்பர் ஸ்டாரின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம், விஜயின் பிகில் ஆகியவற்றை கூறலாம். இதில் பிகில் திரைப்படம் இந்த வருட வசூலில் டாப்பில் உள்ளது.
ரசிகர்களின் மனதை வென்று வெற்றியடைந்த திரைப்படங்கள் என கார்த்தியின் கைதி, அஜித்தின் நேர்கொண்ட பார்வை, தனுஷின் அசுரன், ஜெயம் ரவியின் கோமாளி ஆகிய படங்களை குறிப்பிடலாம்.
சரியான நேரத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்தபோது ரிலீசாகி வெற்றிபெற்ற திரைப்படங்களாக லாரன்ஸின் காஞ்சனா 3, சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்கள் அமைந்தன.
இதில் ரசிகர்கள் எதிர்பார்த்த சரியான நேரத்தில் ரிலீசாகாமல் லேட்டாக தவறான நேரத்தில் ரிலீசாகி எதிர்பார்த்த வெற்றியை பெற தவறிய படங்களாக சூர்யாவின் N.G.K மற்றும் காப்பான் ஆகிய படங்களும், விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் ( தீபாவளி ரேஸில் களமிறங்க வேண்டிய மாஸ் மசாலா படம்) படமும் அமைந்துவிட்டது.
மற்றபடி ரசிகர்களை கவர்ந்து தயாரிப்பாளருக்கு லாபம் பெற்று கொடுத்த படங்களாக, எல்.கே.ஜி, சிவப்பு மஞ்சள் பச்சை, ராட்சசி, ஒத்த செருப்பு, மான்ஸ்டர், மகாமுனி, கொலைகாரன், ஜேக்பாட், கூர்கா, ஆதித்யா வர்மா, தடம், 90 ml, ஆடை, உறியடி 2, அயோக்யா ஆகிய படங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
இன்னும் இந்த வருட லிஸ்டில் சிவகார்த்திகேயனின் ஹீரோ, கார்த்தியின் தம்பி, உதயநிதியின் சைக்கோ ஆகிய படங்கள் ரிலீசிற்கு காத்திருக்கின்றன.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…