இந்த வருட தமிழ் சினிமா ஓர் பார்வை.!

Default Image

வருடா வருடம் தமிழ் சினிமாவில் ரிலீசாகும் திரைப்படங்களில் எண்னிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது வரை கிட்டத்தட்ட 200 படங்களை நெருங்கிவிட்டது. தமிழ் சினிமா ரிலீஸ். ஆனால் அவற்றில் வெற்றிபெற்ற படங்கள் நாம் விரல்விட்டு எண்ணிவிடலாம் அவ்வளவுதான்.

ரிலீஸ் செய்ய சரியான  தேதி கிடைக்காததால் முன்னணி நடிகர்களின் படங்களே எதிர்பார்த்த வசூலை பெற தவறிவிட்டன. பண்டிகை காலங்களில் முன்னணி நடிகர்களின் படங்களே போட்டிபோட்டு கொண்டு ரிலீஸ் ஆவதால் அந்த பிரமாண்ட ரேஸில் சின்ன சின்ன நல்ல படங்கள் காணாமல் போய் விடுகின்றன.

ரசிகர்கள் எதிர்பார்த்த சரியான நேரத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் என சூப்பர் ஸ்டாரின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம், விஜயின் பிகில் ஆகியவற்றை கூறலாம். இதில் பிகில் திரைப்படம் இந்த வருட வசூலில் டாப்பில் உள்ளது.

ரசிகர்களின் மனதை வென்று வெற்றியடைந்த திரைப்படங்கள் என கார்த்தியின் கைதி, அஜித்தின் நேர்கொண்ட பார்வை, தனுஷின் அசுரன், ஜெயம் ரவியின் கோமாளி ஆகிய படங்களை குறிப்பிடலாம்.

சரியான நேரத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்தபோது ரிலீசாகி வெற்றிபெற்ற திரைப்படங்களாக லாரன்ஸின் காஞ்சனா 3, சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்கள் அமைந்தன.

இதில் ரசிகர்கள் எதிர்பார்த்த சரியான நேரத்தில் ரிலீசாகாமல் லேட்டாக தவறான நேரத்தில் ரிலீசாகி எதிர்பார்த்த வெற்றியை பெற தவறிய படங்களாக சூர்யாவின் N.G.K மற்றும் காப்பான் ஆகிய படங்களும், விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் ( தீபாவளி ரேஸில் களமிறங்க வேண்டிய மாஸ் மசாலா படம்) படமும் அமைந்துவிட்டது.

மற்றபடி ரசிகர்களை கவர்ந்து தயாரிப்பாளருக்கு லாபம் பெற்று கொடுத்த படங்களாக,  எல்.கே.ஜி, சிவப்பு மஞ்சள் பச்சை, ராட்சசி, ஒத்த செருப்பு, மான்ஸ்டர், மகாமுனி, கொலைகாரன், ஜேக்பாட், கூர்கா,  ஆதித்யா வர்மா, தடம், 90 ml, ஆடை, உறியடி 2, அயோக்யா ஆகிய படங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

இன்னும் இந்த வருட லிஸ்டில் சிவகார்த்திகேயனின் ஹீரோ, கார்த்தியின் தம்பி, உதயநிதியின் சைக்கோ ஆகிய படங்கள் ரிலீசிற்கு காத்திருக்கின்றன.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்