2019 தேர்தலுக்கு பிறகுதான் நட்பு…இந்தியாவுக்கு உதவிக்கரம்…பாக்.பிரதமர் அறிவிப்பு…!!

Default Image
2019 இந்திய பொதுத் தேர்தலுக்கு பின்னர்தான் இனி இந்தியாவிற்கு நட்புகரம் நீட்டுவேன் என இம்ரான் கான் கூறியுள்ளார்..
பயங்கரவாதம் விவகாரம் தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தை தடைப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற பின்னர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். எல்லையில் பயங்கரவாத தாக்குதல் காரணமாக பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்துவிட்டது. பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தானை சர்வதேச அரங்கில் இந்தியா தோலுறித்து வருகிறது. இந்நிலையில் சவுதிக்கு சென்றுள்ள இம்ரான் கான் பேசுகையில், 2019 இந்திய பொதுத் தேர்தலுக்கு பின்னர்தான் இனி இந்தியாவிற்கு நட்புகரம் நீட்டுவேன் என கூறியுள்ளார்.
பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் உடன் அமைதியையே பாகிஸ்தான் விரும்புகிறது. இந்தியாவுடனான அமைதி, இருநாடுகளும் ஆயுதப் போட்டிக்கு செலவு செய்யும் வளங்களை மக்களின் வளர்ச்சிப்பணிக்காக பயன்படுத்தலாம். இதுபோன்று ஆப்கானிஸ்தானுடனான அமைதி மத்திய ஆசிய நாடுகளை பாகிஸ்தான் எளிதாக அணுகலாம். இது பொருளாதார மற்றும் வர்த்தக செயல்பாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏற்கனவே விடுக்கப்பட்ட அழைப்பை இந்தியா நிராகரித்துவிட்டது. இனிமேல்
2019 இந்திய பொதுத் தேர்தலுக்கு பின்னர்தான் இந்தியாவிற்கு பாகிஸ்தான் நட்புகரம் நீட்டும் என கூறியுள்ளார் இம்ரான் கான்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்