2018 காமன்வெல்த் போட்டி:48 கிலோ பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை சானு தங்கப்பதக்கம் …!காமன்வெல்த் அளவில் 6 புதிய சாதனை…!
48 கிலோ பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை சானு தங்கப்பதக்கம் வென்றார்!
2018ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நேற்று துவங்கின.மிக பிரம்மாண்டமாக, சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த துவக்க விழாவில், ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் கலாச்சாரத்தை மேலோங்கும் விதமாக பல கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் போட்டிகளை துவக்கி வைத்து பேசினார். “காமன்வெல்த் என்றாலே நட்பு தான். உலகிலேயே மிக நட்பான நாட்டுக்கு வந்துள்ளோம்,” என்று சார்லஸ் தெரிவித்தார்.
இந்தியாவின் முதல் பதக்கத்தை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் குருராஜா வென்றார்.இன்று இந்த போட்டிகளில் ஆண்கள் எடைதூக்கும் பிரிவில் 56 கிலோ பிரிவுக்கான போட்டி நடைபெற்றது.இந்தப் போட்டியில் இந்திய எடை தூக்கும் வீரர் குருராஜா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.இது இந்தப் போட்டியில் இந்தியா வென்றுள்ள முதல் பதக்கம் ஆகும்.
இந்நிலையில் காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்றார். இந்த போட்டியில் காமன்வெல்த் அளவில் 6 புதிய சாதனைகளை படைத்து மீராபாய் சானு அசத்தல் படைத்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.