2018 காமன்வெல்த் போட்டி:2 இந்திய வீரர்கள் காமன்வெல்த் போட்டியிலிருந்து வெளியேற்றம்…!
இந்திய விளையாட்டு வீரர்கள் இருவர் காமன்வெல்த் போட்டியின் விதிமுறைகளை மீறியதன் காரணமாக போட்டிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் தடகள வீரர்களான ராகேஷ் பாபு மற்றும் இர்பான் கொலாதும் ஆகியயோரது அறைகளில் ஊசிகள் கண்டெடுக்கப்பட்டதால் அவர்கள் இருவரும் காமன்வெல்த் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து காமப்வெல்த் அமைப்பின் தலைவர் லுயிஸ் மார்டின் கூறும்போது, “இந்தியாவைச் சேர்ந்த தடகள வீரர்களான ராகேஷ் பாபு, இர்பான் கொலாதும் ஆகியோர் காமன்வெல்த் போட்டிகளில் விளையாட தடை செய்யப்படுகிறார்கள். உடனடியாக அவர்கள் தாய் நாடு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.
முன்னதாக தற்போது நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் நோ நீடில் பாலிசி (ஊசிகள் வேண்டாம்) விதிகளை மீறியதாக இந்தியா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது இரண்டாவது முறையாகும்.
கடந்த வாரம், காமன்வெல்த் போட்டியின் இந்திய பாக்சிங் அணியின் மருத்துவர் ஒருவர் ஊசிகளை பயன்படுத்தியதற்காக காமன்வெல்த் அமைப்பால் கண்டிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இந்தியாவின் இரண்டு தடகள வீரர்கள் இதே குற்றச்சாட்டில் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.