2018 காமன்வெல்த் போட்டி :பளுதூக்கும் போட்டியில் தமிழக வீரர் சதிஷ்குமார் தங்கப் பதக்கம் வென்று சாதனை …!
தமிழக வீரர் சதிஷ்குமார் காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மூன்றாவது நாளான இன்று ஆண்களுக்கான 77 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது. இதில், முதல் இடம் பிடித்த சதிஷ்குமார் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இதன்மூலம் இந்தியாவுக்கு மூன்றாவது தங்கம் கிடைத்துள்ளது.
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்த சதிஷ்குமார், 2014 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் நடந்த காமன்வெல்த் விளையாட்டிலும் தங்கம் வென்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம், மூன்று தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.