2018 காமன்வெல்த் போட்டி: இந்திய ஆண்கள் டேபிள் டென்னிஸ் அணி தங்கப்பதக்கம் …!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில்,இந்திய இணை இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றது.
இதன் காரணமாக இந்தியாவின் தங்கவேட்டை 9 ஆக அதிகரித்து உள்ளது.காமன்வெல்த் போட்டியில் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வரும் இந்தியா, இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்பட 3 பதக்கங்களை பெற்றுள்ளது.
மேலும், பளுதூத்துக்குதல் போட்டியில், 105 கிலோ எடை பிரைவில் இந்திய வீரர் பிரதீப் சிங் வெள்ளிப்பதக்கமும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், டேபிள் டென்னிஸ் போட்டியில் களமிறங்கிய இந்திய அணியினர், நைஜிரிய அணியை 3-0 செட் கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றது.
இன்று நடைபெற்ற பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சத்விக் ரங்கிரெட்டி – அஸ்வினி பொன்னப்பா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
இந்திய ஆண்கள் டேபிள் டென்னிஸ் அணியினர் கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பேட்மின்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகளில் இந்திய இரண்டு தக்கப்பதங்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய வீரர் ஜி.சத்யன் டேபிள் டென்னிஸ் போட்டியில் முன்னணியில் இருப்பதால் அவரும் தங்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமிகத்திற்கு மேலும் 3 தங்கப்பதக்கங்கள் கிடைக்கும் வாய்ப்பு உறுதியாகி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.