2018 கர்நாடக தேர்தல்:பணத்தை வாரி வழங்கிய பாஜக,காங்கிரஸ்!ஒரு ஓட்டுக்கு ரூ.2,000 டார்கெட்!

Default Image

பாஜகவும், காங்கிரசும் கர்நாடக தேர்தலில் ஒரு வாக்குக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை பணம் கொடுத்ததாக ஆங்கில ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநிலத்தில் நேற்று 222 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் யாருக்கு வெற்றி என்பதை தீர்மானிக்கும் வாக்குகளுக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள், தேவையறிந்து, அதற்கு தகுந்தாற்போல், பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

தங்களுக்கு சாதகமான இடங்களில் வாக்காளர்களுக்கு 500 ரூபாய் வரையும், மற்ற இடங்களில் வாக்காளர்களை ஈர்க்க 2 ஆயிரம் ரூபாய் வரையும், இருகட்சி வேட்பாளர்களும் கொடுத்ததாக, ஆங்கில ஊடகங்களுக்கு வாக்காளர்கள் பேட்டியளித்துள்ளனர். அத்துடன் ஆண் வாக்காளர்களுக்கு போனசாக மதுபாட்டில்களையும் வேட்பாளர்கள் விநியோகித்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்