2018ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் பிரமாண்ட துவக்கம் …!

Default Image

2018ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவில்  இன்று துவங்கின.

மிக பிரம்மாண்டமாக, சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த துவக்க விழாவில், ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் கலாச்சாரத்தை மேலோங்கும் விதமாக பல கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் போட்டிகளை துவக்கி வைத்து பேசினார். “காமன்வெல்த் என்றாலே நட்பு தான். உலகிலேயே மிக நட்பான நாட்டுக்கு வந்துள்ளோம்,” என்று சார்லஸ் தெரிவித்தார்.

Image result for commonwealth games 2018

இந்திய அணி, நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தலைமயில் அணுவகுப்பில் சென்றது. இந்திய கொடியை சாய்னா ஏந்தி சென்றார்.

Image result for commonwealth games 2018

 

இந்த காமன்வெல்த் போட்டிகளில் சர்ச்சை இல்லாமல் போகவில்லை. அபொரிஜினி என அழைக்கப்படும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள், காமன்வெல்த்துக்கு எதிராகவும், இந்த போட்டிகளுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். காமன்வெல்த் என்பதே, ஆங்கிலேயர்கள் தங்களை அடிமைப்படுத்தியதன் அடையாளமாகும், என கூறி அவர்கள் போராடி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்