2017-இல் ட்ரெண்டிங்கான சில சம்பவங்கள் பிக் பாஸ் முதல் மெர்சல் வரை

Default Image

2017ஆம் ஆண்டு எந்தாண்டும் இல்லாத அளவுக்கு நாளுக்கு நாள் பரபரப்பாக சென்றது. அவ்வாறு ட்ரெண்டிங்கில் நம்முன் வந்து சென்ற சில சம்பவங்கள்

பிக் பாஸ்

சின்னத்திரையில் மட்டுமல்ல சமூக வலைதளங்களிலும் ட்ரெண்டிங்கில் இருந்தது. பிக் பாஸ் ஓவியாவிற்காக ஓவியா ஆர்மி என்றெல்லாம் தொடங்கி அவருக்கு வாக்குகளை வாரி வழங்கினர். இந்த நிகழ்ச்சி நமக்கு தெரியாத பலரை அறிமுகபடுத்தி பிரபலமாக்கியது.

ஜிமிக்கி கம்மல்

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி ஓரளவு ஓடிய படம் வெளிப்படிண்டே புஸ்தகம். இப்படம் தோல்வி அடைந்தாலும் இப்படத்தில் இடம்பெற்ற பாடல் தான் ஜிமிக்கி கம்மல். இந்த பாட்டுக்கு ஒரு காலேஜ் விழாவில் ஆடுவதற்காக கல்லூரி ஆசிரியர்கள் பயிற்சி பெறும்போது அதனை சக மாணவர்கள் வீடியோ எடுத்து யூடியூபில் பதிவிட்டனர். அது மலையாளம் மட்டுமல்லாது தமிழிலும் ஒரு கலக்கு கலக்கியது. என்ன சோகம் என்றால் இந்த பாட்டு வந்த பொழுது நீட் பரிச்சையை எதிர்த்து ஒரு மாணவி தற்கொலை செய்தார். அதனால் போராட்டங்கள் வெடிக்கும் நிலையில் இந்த பாட்டுதான் ட்ரெண்டானது நீட் போராட்டம் காணமல் போனது.

ஜெயலலிதா சமாதி தியான மடமானது

ஜெயலலிதா மறைந்த பிறகு, கட்சியிலும் தமிழ்நாட்டிலும் தினம் தினம் பல திருப்பங்கள் அரங்கேறின இப்போதும் அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. முதலில் ஒ.பன்னீர்செல்வமும் சசிகலாவும் ஒன்றாக இருந்தது. அப்போது ஓபிஎஸ் தான் முதல்வராக இருந்தார். திடீரென அவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதன் பின் ஜெயலிதா சமாதிக்கு சென்று தியானம் செய்தார், பிறகு செய்தியாளர்களை சந்தித்து தான் மிரட்டப்பட்டதாகவும், அதனால் தான் ராஜினாமா கடிதம் கொடுத்ததாகவும் கூறினார். இதன்பிறகு இருதரப்பும் பிரிந்து சசிகலா தரப்பு எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக அறிவித்தனர். பிறகு ஜெ சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா தண்டனை பெற்று சிறை செல்லும் வழியில் ஜெ சமாதிக்கு சென்று கும்பிட்டு சத்தியம் செய்துவிட்டுதான் சென்றார்.

மெர்சல்

தீவளியன்று வந்த மெர்சல் படம் கதை பழைய கதை. கதாபத்த்டிரங்களுக்கு சமூக கருத்துக்களை தாங்கி பிடித்து படம் தனித்து நின்றது. ஆனால் இப்படம் சும்மா விட்டால் நல்ல வெற்றியை படைத்து இருக்கும். ஆனால் இதில் ஜிஎஸ்டி பற்றிய வசனங்கள் இடம் பெற்றன. அதனை நீக்க வலியுறித்தி பாஜக கட்சியினர் செய்த அட்ராசிட்டி படத்திற்கு  பெரிய வரவேற்ப்பு கிடைத்து விட்டது. இதனால் இப்படம் விஜய் படங்களிலேயே மிக பெரிய வசூல் சாதனை செய்ய உதவியது.

source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்