2017 தமிழ் சினிமாவின் சில முக்கிய நிகழ்வுகள் : சினிமா ரிவைண்ட்…..
வழக்கம் போல் இந்தாண்டும் 200க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின. இதில் ஒரு சில படங்களே ரசிகர்களுக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் திருப்தியை கொடுத்தது.
அதில் முக்கிய திரைப்படம் தளபதி நடிப்பில் வெளியான மெர்சல் படம் தான். அந்த படம் சுமார் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து விஜய் பட வசூலில் புதிய சாதனையை புரிந்துள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு கடுமையாக தொழில்நுட்ப கலைஞர்கள் உழைத்தார்களோ இல்லையோ நம்ம அரசியல் தலைவர்கள் தான் முக்கிய காரணம். அஜித்தின் விவேகம் படத்திற்கு பிரமாண்டமாக தயாரித்தும் வெளிநாடுகளில் படம் பிடித்தும் அஜித் தனது உடற்கட்டை மாற்றியும் ரசிகர்களை தவிர மற்ற பொது ஜனங்களை திருப்தி படுத்த தவறி தோல்வி அடைந்தது. அடுத்ததாக அதிக படங்களில் நடித்து அதனை வெற்றியும் அடைய செய்தார் நம்ம விஜய் சேதுபதி.
அடுத்து நம்ம ஹீரோயின்களில் எப்போதும் போல் கொடிகட்டி பறந்தவர் நம்ம நயன்தாரா தான். ஜோடியாக நடிக்க பல முன்னணி ஹீரோக்கள் போட்டி போட்டாலும், சோலோவாக தனி ஆளாக இறங்கி ‘அறம்’ படத்தில் நடித்து ரசிகர்களிடமும் பொதுமக்களிடமும் நல்ல வரவேப்பை பெற்றது. மேலும் அடுத்த வருடமும் தன்னை முன்னிலைபடுத்தி எடுக்கப்பட்டுள்ள படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
அடுத்து ரஜினியும், கமலும் தான், இந்த வருடம் எந்த படமும் வெளியாகவில்லையே அப்புறம் ஏன் இந்த இவர்கள் பற்றி எழுதுவது என்றால், படங்களில் நடித்து கிடைக்கும் வெளிச்சத்தை விட இருவரும் அரசியல் கருத்துகள் பேசி அரசுக்கு எதிராகவும் பேசி மக்கள் மனதில் நிற்கின்றனர். யார் முதலில் அரசியலுக்கு வரபோகிரார்கள் ஏன இன்னும் தெரியவில்லை. இதில் ரஜினி மட்டும் தனது ரசிகர்களை சந்தித்து டிசம்பர் 31ஆம் தேதி சொல்லி விடுகிறேன் என கூறியிருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம். கமல் என்ன நினைக்கிறார் என்று அவருக்கே தெரிகிறதா என தெரியவில்ல்லை. முன்னால் இருந்த சுறுசுறு கருத்துக்கள் இப்போது இல்லை. பார்ர்கலாம்.
source : dinasuvadu.com