2017-இல் அதிகமாக ஹிட் கொடுத்த கதாநாயகன் : இவரை தவிர வேறு யார்?!

Default Image

ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு படம் நடித்து அதனை ஹிட்டாக்க படாத பாடுபடுகிறார்கள். 6 பேக் வைக்கிறார்கள், பெரிய பெரிய தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு படம் எடுத்து ஹிட் கொடுக்கிறார்கள். அப்படி எதுவும் செய்யாமல் சாதாரண தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு அவர்களின் திறமையை கண்டறிந்து ஹிட் கொடுக்கிறார் விஜய் சேதுபதி.

2017ஆம் ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் கவண், புரியாத புதிர், விக்ரம் வேதா, கருப்பன் என நான்கு படங்கள் வெளியாகின. இதில் கவண், சுப்பர் ஹிட் வரிசையிலும், கருப்பன், விக்ரம் வேதா என 2 படங்களும் மக்களிடம் பெரிய வரவேற்ப்பும் பெற்றன.  இவரின் எல்லா படங்களும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்க படுவதால் தயாரிபாளர்களுக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் நல்ல லாபத்தை கொடுத்து வருகிறது.

அடுத்த 2018ஆம் ஆண்டும் பல படங்களை ஹிட் கொடுக்க காத்து கொண்டு இருக்கிறார். அந்த அளவுக்கு படங்களும் வரிசை கட்டி நிற்கின்றன. ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், ஜிங்கா, இடம் பொருள் ஏவல், சங்குதேவன், 96 என வரிசை கட்டி நிற்கின்றன.

source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்