2017 சின்னத்திரையில் இறங்கி அடித்த கில்லிகள் : சின்ன ரிவைண்ட்…
எந்த வருடம் இல்ல்லாத அளவுக்கு இந்த 2017ஆம் வருடம் முழுவதும் டிவி ஷோக்கள் அதிகமாக மக்களை ஈர்த்தன. வழக்கம் போல் தமிழக மக்களை கட்டிபோட்ட டிவி சானல்களில் மிக முக்கிய பங்காற்றியது வழக்கம்போல் விஜய் டிவிதான். எப்போதும் சூப்பர் சிங்கர், டான்ஸ் ஷோ தான் டாப்பில் இருக்கும் ஆனால் இந்த வருடம் விஜய் டிவி புதுசாக இறக்கியது பிக் பாஸ் ஷோ தான். அவ்வாறு கவனிக்க வைத்த பல ஷோக்களை பற்றி சின்ன ரிவைண்ட் செய்து பார்ப்போம்.
1.பிக் பாஸ் :
இதற்க்கு தான் முதலிடம் கொடுக்க வேண்டும். சீசன் முடிந்த பிறகும் இன்னும் பழைய எபிசோடுகளை பார்த்து வரும் பார்வையாளர்களை கொண்டுள்ள்ளது. அந்த அளவுக்கு பிக் பாஸ் மோகம் தமிழக மக்களை ஈர்த்தது. இந்த நிகழ்ச்சி பல வெளிநாடுகளிலும், பாலிவுட்டிலும் அரங்கேறிய பிறகு இங்கு போட்டி நடத்தப்பட்டது.
இந்த ஷோவை கமலஹாசன் தொகுத்து வழங்கியதும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவானது. பிறகு ஓவியா ஆர்மி, முட்டை கணேஷ், மருத்துவ முத்தம், கட்டிபிடி வைத்தியம், என களைகட்டியது. இதில் இரண்டாவது சீசனை யார் தொகுத்து வழங்க போகிறார்கள், யார் யாரெல்லாம் வருவார்கள் என பிக் பாஸ் ரசிகர்கள் எதிர்பாத்து காத்திருகின்றனர்.
2.ஸ்டார் சபோர்ட்ஸ் – தமிழ்
எப்போதும் கிரிகெட் மேட்ச் பார்க்கும் போது மட்டும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலை பார்த்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என புரியாமலே கைதட்டி ரசித்த நம் மக்களுக்காக தொடங்கப்பட்டது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல். அந்த சேனல் வந்த பிறகு, கிரிகெட் மட்டுமின்றி, ப்ரோ கபடி, கால்பந்து என அனைத்தையும் நம் மக்களிடம் கொண்டு போய் சேர்த்த பெருமை நம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழுக்கு உண்டு.
வந்த பிறகு இதுக்கு பேசாம ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இங்கிலீஷ் சேனலையே பார்க்கலாம் என நினைக்கும் அளவுக்கு தமிழ் வர்னையாளர்கள் பேசினார். இதில் நம்மை கவர்ந்தவர் நம்ம ஆர்ஜே.பாலாஜி மட்டும் தான்.
3.ஹாட் ஸ்டார்- வெப் சீரிஸ்
தமிழ் டிவி சேனல்களில் வரும் பல நெடுந்தொடர்கள் போதாதென்று இது வேறா என நினைக்கும் அளவுக்கு இல்லாமல், அட இது நல்லாருக்கே கொஞ்சம் சின்னதா இருந்தாலும் பாக்க நல்லாத்தான் இருக்கு என சொல்ல வைத்த வெப் சீரிஸ் ரிலீஸ் செய்தது ஹாட் ஸ்டார். அஸ் ஐ சஃபரிங் ஃப்ராம் பீவர்’ , யூ-டியூப்-இல் ப்ளாக் ஷிப், ஆயிஷா, லிவின், போன்ற சீரியல்களும் வெளியாகின.
4.டிவி நிகழ்சிகள் :
பல டிவி நிகழ்ச்சிகல் புதிதாக களம் இறங்கின. எபோதும் போல் விஜய் டிவி புதிய நிகழ்ச்சிகளை கொண்டு வந்தனர். அதில், கலக்கபோவது யாரு தொடர்ச்சியாக கலக்கல் சாம்பியன்ஸ், ரெடி ஸ்டெடி போ, ஜி தமிழில், ஜூனியர் சூப்பர் ஸ்டார், என கலக்கியது. டிஆர்பி எகிறியது.
5. டிவி சீரியல்ஸ்
கன்னித்தீவு கதைகூட முடிந்துவிடும் போல அனால் விஜய் டிவியில் சரவணன் மீனச்சியும், சன் டிவியில் தெய்வமகளும், முடியவே இல்லை. அதனை தொடர்ந்து பக்தி தொடரில் முன்னனி டிவி சானல்கள் போட்டி போட்டன. தமிழ் கடவுள் முருகன் என விஜய் டிவியும், விநாயகர் என சன் டிவியும் போட்டி போட்டு கலக்குகின்றன. மேலும் சினிமாவுக்கே சாவால் விடும் அளவுக்கு பட்ஜெட்டில் பிரமாண்டத்தை புகுத்தி வரும் சன் டிவியின் நந்தினி சீரியல் டிஆர்பியில் நன்றாக கல்லா கட்டுகிறது.