2017ஆம் ஆண்டின் விளையாட்டு : ஒரு சின்ன ரிவைண்ட்…

Default Image

இந்தாண்டும் வழக்கம் போல் கிரிகெட் அணி தான் பார்வையாளர்களையும், ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த விளையாட்டாக உள்ளது. இந்தாண்டு ஜூனியர் உலககோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்கு உட்பட்டோர்) முதல் முறையாக இந்தியாவில் நடைபெற்றது. பரிதாபமாக இந்தியா முதல் சுற்றிலேயே வெளியேறியது. இன்னும் நடந்த பல சுவாரஸ்ய விளையாட்டு சம்பவங்களை பார்ப்போம்.

கிரிகெட் :

இந்தாண்டு கிரிகெட் தொடர் அத்தனையும் வென்றுள்ளது. சேம்பியன்ஸ் கோப்பை தவிர மற்ற அனைத்து தொடர்களையும் வென்று இந்தாண்டு வெற்றி சதவீதம் 75 ஆக உள்ளது. இதுவே ஒரு ஆண்டின் இந்திய கிரிகெட் அணியின் அதிகபட்ச வெற்றி சதவீதமாகும்.

மேலும், நாம்ம தல தோனி ஒருநாள் கிரிக்கெட்டில் 100 வீரரை ஸ்டம்பிங் செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அடுத்து நம்ம அஸ்வின், 300 விகேட்டுகளை வீழ்த்தி குறைந்த போட்டியில் அதிக விகேட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அடுத்து ரோஹித் சர்மா இலங்கைக்கு எதிராக தனது 3வது இரட்டை சத்தத்தை பதிவு செய்தார். ஒருநாள் போட்டியில் மூன்று இரட்டை சதம் அடித்த அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

அடுத்து என்ன நம்ம ஐபிஎல் திருவிழா தான். மூன்று முறை சாம்பியன் என்ற பெருமையை பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. அடுத்த வருடம் ஐபிஎல்-இல் சிங்கம் போல் களமிறங்குகிறது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி.

source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்