2004 பேர் பலி.! பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 74,185ஆக உயர்வு.! புகுந்து விளையாடும் கொவிட்19.!

Default Image
  • கொவிட்-19 வைரசால் சீனாவில் 136 பேர் உயிரிழந்துள்ளார்கள், நாடு முழுவதும் பலி எண்ணிக்கை 2004-ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் புதிதாக 1,749 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சீனாவில் கொவிட்-19 வைரசால் மக்கள் திண்டாடி வருகிறார்கள். அந்நாட்டு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் நகரங்களில் ஆள்நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் பலி எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது. இந்த நிலையில் கொவிட்-19 வைரசால் நேற்று (Tuesday) வரை சீனாவில் 136 பேர் உயிரிழந்துள்ளார்கள், நாடு முழுவதும் பலி எண்ணிக்கை 2004-ஆக உயர்ந்துள்ளது. அதில் 132 பேர் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், இந்த வைரஸ் புதிதாக 1,749 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 1,693 பேர் ஹூபேயில் இருப்பவர்கள் என கூறப்படுகிறது. மேலும் நாடு முழுவதும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,185-ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, ஜப்பானில், யோக்கோஹாமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ள டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் 542 பேருக்கு கொவிட-19 வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே, ஜப்பானில், யோக்கோஹாமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ள கப்பலில் இருந்து 300 அமெரிக்கர்களை மீட்கும் பணியில் 2 வாரங்களுக்கு பிறகு அமெரிக்கா ஈடுபட்டது. இதில் 2 விமானங்கள் மூலம், டெக்சாஸ் மற்றும் கலிபோர்னியா விமான நிலையங்களுக்கு அமெரிக்கர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களில் 14 பேர் கலிபோர்னியாவில் தனியாக தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala
Congress MPs - BJP MPs Protest in Parliament
Protest against Amit shah speech
GOLD PRICE