அமெரிக்கவில் குளிர்கால புயலால் 2000 விமானங்கள் ரத்து!

US airlines

அமெரிக்காவில் கடுமையான குளிர்கால புயல் காரணமாக 2,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த புயலால் பல இடங்களில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு 12 மாநிலங்களில் வணிகங்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுவரை மொத்தம் 2,058 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இன்றைய நிலவரப்படி 5,846 விமானங்கள் தாமதமாகிவிட்டதாக விமான கண்காணிப்பு இணையதளமான FlightAware தெரிவித்துள்ளது.

சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் 401 விமானங்களுடன் ரத்து செய்யப்பட்ட பட்டியலில் முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து 358  விமானங்களுடன் ரத்து செய்யப்பட் ஸ்கைவெஸ்ட் உள்ளது. இதற்கிடையில், பாதிக்கப்பட்ட மற்ற விமான நிலையங்களில் டென்வர் இன்டர்நேஷனல் மற்றும் மில்வாக்கி மிட்செல் இன்டர்நேஷனல் ஆகியவை அடங்கும்.

பதற்றத்தின் உச்சத்தில் ஏமன்… மீண்டும் தாக்குதலில் ஈடுபட்ட அமெரிக்கா!

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, தெற்கு பகுதியில் முழுவதும் கடுமையான இடியுடன் கூடிய மழை ஆர்கன்சாஸில் மணிக்கு 74 மைல் வேகத்தில் காற்று வீசியது. அதிர்ஷ்டவசமாக, இந்த புயலால் அதிகமான சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்