200 வருட புகழ்பெற்ற பிரேசில் தேசிய அருங்காட்சியகம்..!!தீயில் கருகியது..!20 மில்லியன் பொருள்கள் சேதம்..!!
பிரேசில் நாட்டில் உள்ள மிகப் பழைமையான அருங்காட்சியகத்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தினால் 100 வருடப் பழைமையான வரலாற்று பொருள்கள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளது.
பிரேசில் பெருமை மற்றும் 200 வருடங்கள் பழைமையான தேசிய அருங்காட்சியகம் ரியோ டி ஜெனிரோவில் (Rio de Janeiro) உள்ளது. அங்கு ஏற்பட்ட திடீர் தீயினால் அருங்காட்சியகத்தில் பார்வைக்கும்,பாதுக்காத்தும் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் தீயில் கருகியுள்ளது.
இதில் இங்கு இருந்த சுமார் 20 மில்லியன் பொருள்கள் இதில் சேதமாகியுள்ளதாக தெரிகிறது. இந்த தீ விபத்தினால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.மேலும் தீயானது நள்ளிரவில் ஏற்பட்டதால் உயிர்சேதங்கள் தவிர்க்கப்பட்டது.
பழமை வாய்நத டைனோசர்கள் மற்றும் 1784-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட விண்கல் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது இந்த அருங்காட்சியத்தில்.இந்நிலையில் பெரும்பாலான வரலாற்று பொருட்கள் தீயில் எரிந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த அருங்காட்சியகத்தில் போர்ச்சுகல், எகிப்து, கிரேக்கம், ரோமனில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள்கள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU