#BREAKING: பிரேசிலில் துப்பாக்கிச்சூடு.., போலீஸ் அதிகாரி உட்பட 20 பேர் பலி..!

ஜாகரேசின்ஹோ நகரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 20 பேர் உயிரிழப்பு.
பிரேசிலில் ரியோ டி ஜெனிரோவின் மாநிலத்தில் உள்ள ஜாகரேசின்ஹோ நகரத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் , போலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 20 பேர் இறந்ததாக ஓ குளோபோ செய்தித்தாள் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் மெட்ரோ ரயிலில் இருந்த இரண்டு பயணிகளும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ரியோவில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளாகும். கடந்த 2007 -இல் காம்ப்ளெக்ஸோ டூ அலெமியோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு 19 ஐத் தாண்டியது, தவிர இந்த சம்பவத்தில் எங்களில் ஒருவரை கூட நாங்கள் இழக்கவில்லை என்று காவல்துறை அதிகாரி ரொனால்டோ ஒலிவேரா தெரிவித்தார்.
ஜாகரேசின்ஹோவில் இறந்தவர்களில் ஆதிக்கம் செலுத்திய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர்களும் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ரியோ டி ஜெனிரோ பிரேசிலின் மிகவும் வன்முறை மாநிலங்களில் ஒன்றாகும்.
லேட்டஸ்ட் செய்திகள்
லக்னோ அணிக்கு அதிர்ச்சி…ஐபிஎல் போட்டிகளை மிஸ் பண்ணப்போகும் மயங்க் யாதவ்! இது தான் காரணமா?
March 11, 2025
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு… இன்றைய நிலவரம் இதோ.!
March 11, 2025
நோட்டீஸ் அனுப்பிய கனிமொழி..தர்மேந்திர பிரதானின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்!
March 11, 2025