ஒரு கிலோ வெட்டுக்கிளி ரூ.20! அசத்தும் பாகிஸ்தான் விவசாயிகள்!
பாகிஸ்தானில் அமோகமாக விற்பனை செய்யப்படும் வெட்டுக்கிளிகள்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக, பாகிஸ்தானில் படையெடுத்த பாலைவன வெட்டுக்கிளிகள் அங்குள்ள பயிர்கள் நாசம் செய்துள்ளது. இந்த வெட்டுக்கிளிகளை விரட்ட அங்குள்ள விவசாயிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் இந்தியாவிலும் சில இடங்களில் பயிர்களை நாசம் செய்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானில், இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் 25% பயிர்களை நாசம் செய்துள்ள நிலையில், பாகிஸ்தான் மக்கள் வெட்டுக்கிளிகளை கோழிகளுக்கு தீவனமாக அளித்து வருகின்றனர். இதனையடுத்து, அங்குள்ள விவசாயிகள், ஒரு கிலோ வெட்டுக்கிளி ரூ.20 என விற்பனை செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர். ஒரு நாளைக்கு வெட்டுக்கிளி விற்பனை மூலம் ரூ.1,500 மேல் விவசாயிகள் சம்பாதித்து வருகின்றனர்.