20 ஆண்டுகளில் முதல் பதக்கம் ! – மகளீர் 100 மீட்டர் தடகளத்தில் வெள்ளி வென்ற ரூட்டி சந்த்…!!!

Default Image

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 100 மீட்டர் தடகள போட்டியில், இந்தியாவின் டூட்டி சந்த் வெள்ளி வென்றார்.
ஆசிய விளையாட்டு போட்டிகள், இந்தனோசியாவின் ஜகார்த்த மற்றும் பாலெம்பெங் நகரங்களில் நடந்து வருகின்றனர். இன்றைய போட்டியில், இந்தியா சார்பில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் 400 மீட்டர், மகளீர் 100 மீட்டர் தடகள போட்டிகளில் வீரர்கள் பதக்கம் வென்றனர்.

பாலினம் குறித்த சர்ச்சையில் சிக்கிய அந்தப் பிரச்சனையிலிருந்து மீண்ட டூட்டி சந்த், 100 மீட்டர் தடகள போட்டியில் வெள்ளி வென்று சாதித்தார். ஆசிய போட்டியின் 100 மீ தடகள பிரிவில், கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.
பந்தய தூரத்தை அவர் 11.32 வினாடிகளில் கடந்தார். பஹ்ரைனின் எடிடியாங் தங்கமும், சீனாவின் வீயங்க்லி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.அதேபோல, மகளீர் 400 மீட்டர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த 18 வயதான இளம் வீராங்கனை ஹேமா தாஸ், 50.59 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கம் வென்றார். இது, தேசிய அளவில் சாதனையாகும்.
அதேபோல, ஆண்கள் 400 மீட்டர் தடகள போட்டியில் பந்தய தூரத்தை 45.69 வினாடிகளில் கடந்த முகமது அனஸ், வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம், இந்திய அணி 36 பதக்கங்களுடன் 9-வது இடத்தில் இருக்கிறது. இதில், 7 தங்கம், 10 வெள்ளி மற்றும் 19 வெண்கல பதக்கங்கள் அடங்கும்.
 

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்