முதல் முதலாக விண்வெளியில் நடந்து 2 பெண்கள் வரலாற்று சாதனை !
நாசாவைச் சேர்ந்த கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெசிக்கா மெய்ர் என்ற விண்வெளி வீராங்கனைகள் இருவரும் விண்வெளியில் நடந்த முதல் பெண்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர். இந்த இரு பெண்களும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு வெளியே பழுதான பேட்டரிகள் மற்றும் உதிரிபாகங்களை மாற்றுவதற்கு மேற்கொண்ட முயிற்சி வெற்றி அடைந்துள்ளது.