#BREAKING: ஒத்த செருப்புக்கு 2 தேசிய விருது..!
ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2019-ஆம் ஆண்டுக்கான 67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக விருதுகள் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில், ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒத்த செருப்பு திரைப்படத்திற்காக ரசூல் பூக்குட்டிக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருது வழங்கப்படுகிறது. மேலும் பார்த்திபன் இயக்கி, நடித்த “ஒத்த செருப்பு” திரைப்படத்திற்கு சிறப்பு ஜூரி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அசுரன் படத்திற்காக நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்படுகிறது. சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் தனுஷ் 2-வது முறையாக வழங்கப்படுகிறது. ஆடுகளம் படத்திற்காக முதல் முறையாக தேசிய விருதை நடிகர் தனுஷ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.