இந்தியாவில் அதிக கார்களை ஏற்றுமதி செய்த நிறுவனம் என ஃபோர்டு நிறுவனம் பெயரெடுத்த நிலையில், அதனை ஹூண்டாய் இந்தியா முந்தி, புதிய மைல்கல்லை எட்டியது.
ஹூண்டாய் நிறுவனம், 2015 ஆம் ஆண்டு தனது “கிரெட்டா” ரக எஸ்யூவி கார்களை இந்தியாவில் வெளியிட்டது. இந்த கார், இந்தியளவில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. தற்பொழுது கிரெட்டா காரை வெளியிட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்து.
இந்த கிரெட்டா எஸ்யூவி தமிழகத்தில் உள்ள ஆலையில் தயாரிக்கப்பட்டு, சர்வதேச அளவில் 88 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இந்தநிலையில், இந்தியாவில் அதிக கார்களை ஏற்றுமதி செய்த நிறுவனம் என ஃபோர்டு நிறுவனம் பெயரெடுத்த நிலையில், தற்பொழுது அதனை ஹூண்டாய் இந்தியா முந்தி, புதிய மைல்கல்லை எட்டியது.
இதுவரை புதிய மற்றும் முந்தைய கிரெட்டா என மொத்தமாக 2,00,000 கிரெட்டா யூனிட்டுகள் இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது ஹூண்டாய் இந்தியா நிறுவனம், மேட்-இன்-இந்தியா கார்களை ஏற்றுமதி நோக்கில் தீவிரமடைந்துள்ளது.
அதில் முதல்கட்டமாக, சான்ட்ரோ, கிராண்ட் i10, எக்ஸ்சென்ட், கிராண்ட் i10 (நியோஸ்) & கிராண்ட் i10 (ஆரா), எலைட் i20, i20 ஏக்டிவ், அசென்ட் (வெர்னா), வென்யூ மற்றும் கிரெட்டா போன்ற 10 மாடல் கார்களை 88 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…