அமெரிக்காவில் 2 இந்திய வம்சாவளி பெண்கள் நீதிபதியாக நியமனம்.!

Default Image
  • 28 புதிய நீதிபதிகளை நியூயார்க் மேயர் பில் டி ப்ளாசியோ கடந்த  ஜனவரி 1-ம் தேதி நியமித்து உத்தரவிட்டார்.
  • அதில் அர்ச்சனா ராவ்  , தீபா அம்பேத்கர் ஆகிய இரண்டு இந்திய வம்சாவளி பெண்களை  நியமிக்கப்பட்டனர்.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்திற்கு குடும்பநல நீதிமன்றம் , குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சிவில் நீதிமன்றம் ஆகிய மூன்று நீதிமன்றங்களுக்கு 28 புதிய நீதிபதிகளை நியூயார்க் மேயர் பில் டி ப்ளாசியோ கடந்த  ஜனவரி 1-ம் தேதி நியமித்து உத்தரவிட்டார்.

அதில் அர்ச்சனா ராவ்  , தீபா அம்பேத்கர் ஆகிய இரண்டு இந்திய வம்சாவளி பெண்களை  நியமிக்கப்பட்டனர். ஒருவரை குற்றவியல் நீதிமன்றத்திற்கும் , மற்றொருவரை சிவில் நீதிமன்றத்திற்கும் நீதிபதிகளாக நியமித்தார். நீதிபதி அர்ச்சனா ராவை குற்றவியல் நீதிமன்றத்திற்கும், நீதிபதி தீபா அம்பேத்கரை சிவில் நீதிமன்றத்திற்கும் நியமிக்கப்பட்டார்.

கடந்த 2019-ம் ஆண்டு அர்ச்சனா ராவ்  இடைக்கால சிவில் நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்தார்.  அதற்கு முன் 17 ஆண்டுகள் நியூயார்க் மாவட்ட வழக்கறிஞராக பணியாற்றி உள்ளார்.

அதேபோல் நீதிபதி தீபா அம்பேத்கர் இடைக்கால சிவில் நீதிமன்ற நீதிபதியாகவும் 2018 மே மாதம் நியமிக்கப்பட்டார். இவர் இதற்கு முன் நியூயார்க் நகர மூத்த சட்டப்பேரவை வழக்கறிஞராகவும், பொது பாதுகாப்பு குழுவின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 26032025
madurai court - cbcid
shyam selvan Manoj Bharathiraja
RIP Manoj
TN GOVT
Edappadi Palanisamy
ramandeep singh yuvraj singh