4 வருடங்களுக்கு பின் அமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் செல்லும் 2 நாய்கள்!
4 வருடங்களுக்கு பின் அமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் செல்லும் 2 நாய்கள்.
கடந்த 3-ம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார். இந்நிலையில், டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருந்த கடந்த 4 வருடத்தில், வெள்ளை மாளிகையில், எந்த செல்ல பிராணிகளும் வளர்க்கப்படவில்லை.
டிரம்புக்கு முன் 8 ஆண்டுகள் அதிபராக இருந்த ஒபாமா, போச்சுகீசிய நாய்களான, ‘போ’, ‘சன்னி’ என்ற இரண்டு நாய்களை செல்லமாக வளர்த்துள்ளார். அதன் பின் ட்ரம்ப் ஆட்சியில், எந்த நாய்களும் வளர்க்கப்படாத நிலையில், தற்போது ஜோ பைடன் அதிபராக வெள்ளை மாளிகைக்குள் செல்லும் போது, அவர் செல்லமாக வளர்க்கும், ‘சாம்ப்’, ‘மேஜர்’ என்ற இரண்டு நாய்களை உடன் அழைத்து செல்ல உள்ளார்.
இதில் மேஜர் என்ற நாய், மீட்புப்பணியில் ஈடுபட்டு இடிபாடுகள் சிக்கியவர்கள் கண்டுபிடிக்கும் திறன், பயிற்சி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.