நெல்லையில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய புகாரில் 2 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களை கருங்கற்களால் பற்களை உடைத்தும், பிடுங்கியும், கற்களை வாயில் போட்டு ரத்தம் வரும் வரை காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் தாக்கியதாக புகார் எழுந்த நிலையில், இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டங்களை தெரிவித்ததோடு விசாரணைக் கைதிகளின் பல்லை உடைத்தும், வாயைக் கிழித்தும் கொடுமை செய்த காவல் உதவி கண்காணிப்பாளரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும், இந்த விவகாரம் சட்டபேரவையிலும் எதிரொலித்தது, இதனையடுத்து, சட்டபேரவையில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், அவரின் பணியிட மாற்றம் குறித்தும் பணியிட நீக்கம் குறித்தும் பேசியிருந்தார்.
முன்னதாக, பல் பிடுங்கியதாக புகார் எழுந்ததை அடுத்து நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்பீர் சிங், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்த புகாரை தொடர்ந்து, மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக ஏஎஸ்பி பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மேலும், இந்த புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங்கிற்கு மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அதாவது, விசாரணை கைதிகளின் குற்றசாட்டு குறித்து ஏப்ரல் 3-ஆம் தேதி (அதாவது) நாளை நேரில் ஆஜராகி விளக்கம் தர சஸ்பெண்டான ஏஎஸ்பி பல்வீர் சிங்கிற்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில், பற்களை பிடுங்கிய விவகாரத்தில் விக்கிரமசிங்கபுரம் தனிப்பிரிவு காவலர் போகன், கல்லிடைகுறிச்சி தனிப்பிரிவு காவலர் ராஜ்குமார் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…