யுனிசெஃப் நேற்று வெளிட்ட ஒரு அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் யேமனில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 2.4 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினிக்குத் தள்ளப்படலாம் என தெரிவித்துள்ளது.
மேலும், யேமனில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஐந்து வயதுக்கு குறைவான 30,000 குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கூறியுள்ளது.
யேமனின் யுனிசெப் பிரதிநிதி சாரா பெய்சோலோ நயந்தி வெளிட்ட அறிக்கையில்,கடந்த ஐந்தாண்டு யுத்தத்தில் பல குழந்தைகளை இழந்துவிட்டோம். மேலும், கொரோனா பரவுவதால் இன்னும் பல குழந்தைகளை இழப்போம் என்று நாங்கள் அஞ்சுகிறோம். எங்களுக்கு அவசர நிதி கிடைக்கவில்லை என்றால், குழந்தைகள் பட்டினியின் விளிம்பிற்கு தள்ளப்படுவார்கள், பலர் இறந்துவிடுவார்கள் என தெரிவித்துள்ளார்.
யுனிசெஃப் அறிக்கையில் கிட்டத்தட்ட 9.58 மில்லியன் குழந்தைகளுக்கு பாதுகாப்பான நீர், சுகாதாரம் இல்லை எனவும், இதனால் அவர்களுக்கு தொற்று அதிக ஆபத்து உள்ளது என தெரிவித்துள்ளது. யேமனில் இதுவரை 1,089 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 293 பேர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…