2வது டெஸ்ட் வலுவானநிலையில் இந்தியா…334/3..புஜாரா மற்றும் ரஹானே சதம்…!

Default Image
கொழும்பு: இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, கொழும்புவில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 3 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்து வலுவான நிலையை எட்டியுள்ளது.
இரண்டாவது டெஸ்டில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து ராகுலும் தவனும் மிகவும் சுறுசுறுப்பாக விளையாடினார்கள். இதனால் இந்திய அணி 52 பந்துகளில் 50 ரன்களை எட்டியது.
முதல் டெஸ்ட் போல இங்கும் வேகமாக ரன்களை அடிக்க முயன்ற தவன், 35 ரன்களில் பெரேரா பந்துவீச்சில் அவுட்டானார். அதன்பிறகு புஜாராவும் ராகுலும் தொடர்ந்து சுறுசுறுப்பாக விளையாடி ரன்களைச் சேர்த்தார்கள். இந்திய அணி 26.5 ஓவர்களில் 100 ரன்களைச் சேர்த்தது.
முதல்நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 28 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்தது. பின்னர் துரதிர்ஷ்டவசமாக 57 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார் ராகுல். பின்னர் வந்த கோஹ்லி, 13 ரன்களில் ஹெராத் பந்துவீச்சில் வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார்.
அதன்பிறகு ஜோடி சேர்ந்த புஜாரா – ரஹானா ஆகிய இருவரும் மிகவும் பொறுப்புடன் விளையாடினார்கள். புஜாரா 112 பந்துகளில் அரை சதம் எடுத்தார். இருவருடைய கூட்டணி சற்று வேகமாகவும் ரன்களைக் குவித்ததால் 4-வது விக்கெட்டுக்கு 104 பந்துகளில் 100 ரன்களைச் சேர்த்தார்கள். அதிலும் அரை சதம் எடுத்தபிறகு புஜாராவின் ஆட்டம் வேகமெடுத்தது.
முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 58 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. புஜாரா 89, ரஹானே 41 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இதன்பிறகு 164 பந்துகளில் 100 ரன்களைப் பூர்த்தி செய்தார். இது அவருடைய 13-வது சதமாகும். இலங்கையில் அவர் அடிக்கும் 3-வது சதமாகும். தன்னுடைய 50-வது டெஸ்டை விளையாடும் புஜாரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 ரன்களைக் கடந்தார்.
டிராவிட் போல புஜாராவும் 84-வது இன்னிங்ஸில் 4000 ரன்களைக் கடந்தார். சுனில் கவாஸ்கர், சேவாக் ஆகிய இருவரும் 81 இன்னிங்ஸில் 4000 ரன்களைக் கடந்து இந்திய வீரர்களில் முதலிடத்தில் உள்ளார்கள். அடுத்த வரிசையில் உள்ள டிராவிடுடன் இணைந்துள்ளார் புஜாரா.
இதன்பிறகு புஜாரா – ரஹானே கூட்டணி 273 பந்துகளில் 200 ரன்கள் சேர்த்தது. புஜாராவுக்கு நல்ல இணையாக அமைந்த ரஹானேவும் சதமடித்து அசத்தினார். அவர் 151 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் எடுத்தார்.
முதல் நாள் முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்து வலுவான நிலையிலுள்ளது. புஜாரா 128, ரஹானே 103 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்கள்
Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்