2-வது நாள் ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம் தொடங்கியது, 19வயதான சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சகாரை ரூ.1.9 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்….!!
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் 2-வது நாளாக மும்பையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று 78 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டன. முதல் கட்டமாக சுழல் பந்துவீச்சாளர்களுக்கான ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தின் போது 19வயதான சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சகாரை ரூ.1.9 கோடிக்கு மும்பை அணி ஏலம் எடுத்துள்ளது. மேலும் இந்தியாவைச் சேர்ந்த சுழல் பந்துவீச்சாளர் கே.சி.கேரியப்பா ஏலம் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.