2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ரோமன் சக்ரவர்த்தி சிலை எகிப்தில் கண்டுபிடிப்பு!
தொல்பொருள் ஆய்வாளர்கள் ,எகிப்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ரோமன் சக்ரவர்த்தி ஒருவரின் சிலையை கண்டுபிடித்துள்ளனர். அஸ்வான் நகரில் சிறிய குளம் ஒன்றினை தூர்வாரும் போது சிலையின் தலைப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அப்பகுதி முழுவதும் தொல்பொருள் ஆய்வுத்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அவர்கள் நடத்திய ஆய்வில், ரோமன் பேரரசர் மார்கஸ் ஆர்லியஸ் ((Marcus Aurelius)) சிலை என்பது தெரியவந்தது. கி.பி. 160ம் ஆண்டுகளில் ரோம சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்த மார்கஸின் சிலை கண்டுபிடிக்கப்பட்டது எகிப்து வரலாற்றில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.