2ம் உலகப்போரில் இங்கிலாந்தில் நாஸிக்கள் பயன்படுத்திய வெடிகுண்டு கண்டுபிடிப்பு!
நாஸி படையினர் இங்கிலாந்தில் விட்டுச் சென்ற வெடிகுண்டு கடலுக்குள் வைத்து வெடிக்கப்பட்டது. போக்னோர் ((Bognor)) என்ற கடற்கரைப் பகுதியில் ரகசிய சுரங்கப் பாதை ஒன்றையும், அதற்குள் 6 அடி நீளம் கொண்ட வெடிகுண்டு ஒன்றையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
இதுதொடர்பான விசாரணையில் 2ம் உலகப் போரின் போது நாஸி படை வீரர்கள் பயன்படுத்திய சுரங்கம் மற்றும் வெடிகுண்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டை எடுத்துச் சென்ற இங்கிலாந்து கடற்படையினர், அதனை கடலுக்கு அடியில் வைத்து வெடிக்கச் செய்தனர். பலத்த சப்தத்துடனும், 100 அடிக்கும் மேல் தண்ணீரை விசிறியடித்தபடி வெடித்த அந்த குண்டின் சக்தி இங்கிலாந்து கடற்படையினரை பிரமிப்பில் ஆழ்த்தியது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.