1980 க்கு பிறகு, சவுதியில் தியேட்டர் : மார்ச் முதல் ஆரம்பம்
சவுதி அரேபியா அரசு, திரையரங்குகளை திறப்பதற்கான தீர்மானம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது கடந்த வியாழகிழமை அன்று வெளியானது. இந்த திரை அரங்குகள் 1980 முதல் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.
கலாச்சார மற்றும் தகவல் துறை அமைச்சர் அலாத் பின் சலே அலாவத் தனது அறிக்கையில் ‘தொழில் ஒழுங்குமுறை, ஆடியோ விஷுவல் மீடியாவின் பொது ஆணையம், நாட்டில் சினிமா திரையரங்குகளுக்கு உரிமங்களை வழங்குவதற்கான செயல்முறையைத் தொடங்கியுள்ளது’ என தெரிவித்துள்ளார்.
இதனால் ‘2018 மார்ச் மாதத்தில் முதல் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்’ என சவுது அரேபியா கூறி உள்ளது.