சீனாவில் டேங்கர் லாரி வெடித்ததில்19 பேர் பலி 170 பேர் படுகாயம்.!
சீன மாகாணமான ஜெஜியாங்கில் நேற்று டேங்கர் லாரி வெடித்ததில் 19 பேர் உயிரிழிந்தனர் மேலும் 170 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நேற்று வென்லிங் நகருக்கு அருகே, டேங்கர் டிரக் வெடிப்பில் 19 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 172 பேர் காயமடைந்தனர் என்று அரசு நடத்தும் பீப்பிள்ஸ் டெய்லி தெரிவித்துள்ளது. ஜெஜியாங் மாகாணத்தின் தைஜோவில் நெடுஞ்சாலை வெளியேறும் இடத்தில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவைக் கொண்டு சென்ற டேங்கர் லாரி வெடித்தது. இந்த குண்டுவெடிப்பினால் தீப்பிழம்புகளையும், புகை மேகத்தையும் வானத்தில் கிளப்பியது.
இந்த லாரி சீனாவின் கிழக்கு கடற்கரையான நிங்போ மற்றும் வென்ஜோ ஆகிய இரு நகரங்களுக்கிடையில் எரிவாயுவைக் கொண்டு சென்று கொண்டிருக்கும்போது வெடித்தது. இந்த விபத்து இரு வழிகளிலும் செல்லும் போக்குவரத்தை நிறுத்திவைக்கப்பட்டது. மேலும் அருகிலுள்ள கார்கள் தீப்பிடித்துள்ளது.
The death toll in E.China’s gas tank truck blast has risen to 19 with 172 injured. The State Council announced it will supervise the investigation into the accident and urged stronger safety supervision over the entire chain of transport of dangerous goods https://t.co/bIAPUgWoPn https://t.co/yVEeMZq9fg
— Global Times (@globaltimesnews) June 14, 2020
விபத்து மற்றும் வெடிப்புக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 100 க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மற்றும் 34 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன.