தீவிரவாதிகள் வைத்த குண்டு வெடித்ததில் 19 பேர் பலி
பிலிப்பைன்ஸில் உள்ள ஜோலோ தீவில் தீவிரவாதிகள் வைத்த குண்டு வெடித்ததில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தெற்கு பிலிப்பைன்சில் உள்ள ஜோலோ தீவில் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்திற்கு அருகில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. சிறிது நேரம் கழித்து ராணுவ வீரர்கள் தங்கியிருந்த முகாம் அருகில் மற்றொரு குண்டு வெடித்தது. இந்த சம்பவங்களில் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 48 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.