தமிழர் உரிமை மாநாடு:நெல்லையில் ஆக.,19ல் நடக்கிறது
நெல்லையில் தென்மண்டல தமிழர் உரிமை மாநாடு வரும் ஆக.,19ல் நடக்கிறது.மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்தும் கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வுகளை தொடர்ந்து நடத்த வலியுறுத்தியும் மொழி உரிமைகளை நிலைநாட்டிட கோரியும்நெல்லையில் தமிழர் உரிமை மாநாடு நெல்லையில் ஆகஸ்ட் 19ல் ஜவஹர் திடலில் நடக்கிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சசார்பில் நடக்கிறது.கீழடி, ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வுகளை முறையாக நடத்தி தொன்மையை வெளிக்கொணர வேண்டும் எனவும்,வரலாற்று உரிமைகளை நிலைநாட்டிட வலியுறுத்தியும் நடக்கிறது. முன்னதாக இரண்டு நாட்கள் அங்குள்ள மண்டபத்தில் கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. நிகழ்வில் த.மு.எ.க.ச.,நிர்வாகிகள் , ஆர்.நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் சவுந்திரராஜன்,பர்வீன் சுல்தானா, வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்கின்றனர்