கலிபோர்னியாவில் பரவும் காட்டுத்தீ…தீயை அணைக்க போராட்டம் 1,800 வீரர்கள்.!
கலிபோர்னியாவில் பரவும் காட்டுத்தீயை கட்டுபடுத்த போராடும் 1,800 தீயணைப்பு வீரர்கள்.
அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் ஆண்டுதோறும் காட்டுத்தீ பரவுவது வழக்கம்.ஆனால் இந்தாண்டு பரவிய காட்டுத்தீயால் பல்வேறு சேதாரங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் காற்று மிகவும் வேகமாக வீசும் காரணத்தால் காட்டுத்தீ புதிதாக பல்வேறு வனப்பகுதிகளில் பரவுவதாகவும், அதனை கட்டுபடுத்த வான் வழியாக ஹெலிகாப்டர் மூலம் நீரை ஊற்றி தீயை அணைக்கு பணிகளும் நடந்து வருகிறது.
இதுவரை, 27 ஆயிரத்து 800 ஏக்கர் வன பகுதி தீயில் நாசமானதாகவும், மேலும் இந்த காட்டுத் தீயால் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் வீடுகள் சேதமடைந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த, திங்கட்கிழமையன்று பரவிய காட்டுத்தீ தற்போது அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மளமளவென பரவி வருவதாகவும்,அதனை கட்டுபடுத்த 1,800-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாகவும் கூறப்படுகிறது.